Main Menu

வடக்கில் விசேட ஏற்பாடுகள்- வடக்கு ஆளுநர் அறிவிப்பு!

வடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாணம் முற்றாக முடக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணம் மத போதகர் நடத்திய ஆராதனையில் பங்குகொண்டிருந்தவர்களில் 20இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இராணு முகாம் ஒன்றிலை் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அத்தியவசியப் பொருட்களை வடக்குக்கு கொண்டுவருவதற்கு விசேட வாகனஅ ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அத்தியவசியப் பொருட்களை ஊரடங்கு காலத்தில் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பிரதேச செயலர்கள் வழியாக அவர்களை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு மருத்துவம் உட்பட்ட அத்தியவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...