Main Menu

வங்கிகளில் உரிமை கோராமல் கிடக்கும் €6.3 பில்லியன் யூரோக்கள்

வங்கிகளில் உரிமை கோரப்படாமல் €6.3 பில்லியன் யூரோக்கள் பணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

livret A சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட வங்கி கணக்குகள் செயற்படாமல் உள்ள நிலையில், இந்த ரொக்கப்பணம் தேங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பணப்பரிவர்த்தனையும் இடம்பெறாமல் உள்ள கணக்குகள் தாமாகவே செயலிழக்கின்றது. அப்படி செயலிழக்கும் கணக்கில் உள்ள பணம், Caisse des dépôts கணக்கிற்கு மாற்றப்படுகின்றது. அங்கு 20 வருடங்கள் வரை பணம் சேமித்து வைக்கப்படும்.

இப்படியாக, தற்போது €6.3 பில்லியன் யூரோக்கள் பணம் இந்த Caisse des dépôts கணக்கில் தேங்கியுள்ளன. இந்த பணத்தை 20 வருடங்களுக்குள் திரும்ப பெற முடியும். அதன் பின்னர் அப்பணம் தாமாகவே அரசு அரசுடமையாகிவிடும்.

10 மில்லியன் பிரெஞ்சு மக்களின் கணக்குகள் இப்படி செயலிழந்து, பணம் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...