Main Menu

ராஜிவ் கொலை வழக்கு : பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் இன்று (புதன்கிழமை)  விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது பேரறிவாளனுக்கு பிணை  வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இருதரப்பு வாதங்களையும் விசாரித்த உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் பிணை வழங்கப்படுகிறது என்றும்,  ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் முன்னிலையாக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...