Main Menu

ரத்ன தேரரின் போராட்டம் அர்த்­த­மற்­றது – அமைச்­சர் இரா­தா­கி­ருஷ்ணன்

உண்­ணா­வி­ரத போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வதால் மாத்­திரம் எதிர்­பார்க்கும் அனைத்­தையும் பெற்­று­விட முடியும் என்ற நிலைப்­பாட்டை ஏற்றுக் கொள்ள முடி­யாது. ரத்ன தேரரின் போராட்டம் அர்த்­த­மற்­றது என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான வே.இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார். 

அத்­து­ரலிய ரத்­ன தேரரின் போராட்டம் குறித்து கருத்துத் தெரி­வித்த அவர், அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டு­மானால் அர­சியல் ரீதி­யான வழி­மு­றை­க­ளையே பின்பற்ற வேண்டும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வையும் நேர­டி­யாகச் சென்று சந்­தித்து தனது கோரிக்­கையை முன்­வைக்க முடி யும். அதனை விடுத்து உண்­ணா­வி­ர­த­மி­ருந்தால் அனை­வரும் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் உண்­ணா­வி­ர­த­மி­ருக்க ஆரம்­பித்து விடு­வார்கள். 

இதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இதை வைத்து அர­சியல் தான் செய்­து­கொண்­டி­ருக்­கின்றார். முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே அவரும் இவ்­வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு செயற்படுவதைத் தவிர்த்து ஜனா திபதி ஏதேனுமொரு தீர்வினை வழங்க வேண்டும் என்றார்.

பகிரவும்...