Main Menu

மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் உயர்வு.!

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 இலட்சம் ரூபாய் அதிகரித்து 2 கோடியே 23 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

நரேந்திர மோடியின் மார்ச் மாதம் வரையிலான சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மோடிக்கு சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பு கடந்த நிதியாண்டைவிட 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.

காந்திநகரில் தனக்கு சொந்தமான ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் அரச நிதிப் பத்திரங்கள், நிறுவனப் பங்குகள் எதிலும் முதலீடு மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...