Main Menu

மைத்திரி – கோத்தா சந்திப்பு இன்னும் சில தினங்களில்?

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ­ருக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ரவு தெரி­விப்­ப­தற்கு இணங்­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. 

இந்த நிலையில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை  இன்னும் சில தினங்­களில் சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 இந்த வாரத்­துக்குள் இந்தச் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.

ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷவும் நேருக்கு நேர் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். இதன்­போது பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் ஸ்ரீலங்கா சுந்­தி­ரக்­க­கட்­சிக்கும் இடை­யி­லான கூட்­டணி குறித்தும் ஜனா­தி­ப­தி­வேட்­பாளர் தொடர்­பிலும் கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டுள்­ளன.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தந்­தத்தை செய்து கொண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை ஆத­ரிப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இணக்கம் தெரி­வித்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் அடுத்த பொதுத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு வேட்­பாளர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டு­வ­தற்­கான இணக்­கமும் காணப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதையடுத்து அவருடனும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்திற்கு வருவதற்காகவே ஜனாதிபதி அவரை சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பகிரவும்...