Main Menu

மூன்று வயது முதல் பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும்: பிரான்ஸில் புதிய சட்டம்!

மூன்று வயது முதல் பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும் என்ற சட்டத்தினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

பாடசாலைகளில் இஸ்லாமியப் பிரிவினைகளைத் தடுப்பதற்கான சட்டச் சீர்திருத்தத்தினை (Séparatisme islamiste) உருவாக்கியிருக்கும் இமானுவல் மக்ரோன், அதன் பகுதியாக இந்த சட்டத்தினை வகைப்படுத்தியுள்ளார்.

சுகவீனக் காரணங்கள் தவிர்த்து, அனைத்துப் பிள்ளைகளும் மூன்று வயது முதல், பிரான்ஸின் கல்வி அமைப்பிற்குள் உள்வாங்கப்படுவது கட்டாயம்.

இது சட்ட இலக்கம் 18 (article 18) இன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 50.000 பிள்ளைகள் பாடசாலை செல்லும் வயது வந்தும், பாடசாலை அனுப்பப்படாமல், வீடுகளிலேயே இருப்பதும், அவர்கள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும் என்பதும் கூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...