Main Menu

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவில் மனு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் பல்வேறு இடங்களில் மறைந்திருந்து மாலைத்தீவுக்குச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தற்போது தாய்லாந்தில் பாதுகாப்புக் கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பிரஜையும், முன்னாள் முதற் குடிமகனுமான அவருக்கு இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஓஷல ஹேரத் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினாரா அல்லது சதி காரணமாக நாடு கடத்தப்பட்டாரா எனக் கண்டறியக் கோரி கடந்த ஜூலை 18ஆம் திகதி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்திலிருந்து விலகியுள்ளதாகவும், இது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

பகிரவும்...