Main Menu

முத்தரப்பு அணுவாயுத பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள போவதில்லை: சீனா

அணுவாயுதங்களை மீளக் கையளிப்பது தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என சீனா அறிவித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் கெங் ஷுவாங் இன்று (திங்கட்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.

அந்தவகையில், அணுவாயுதங்களை கட்டுப்படுத்தும் புதிய உடன்படிக்கை குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியான கருத்துக்களையும் சீனா நிராகரித்துள்ளது.

அணுவாயுதங்களை கட்டுப்படுத்தும் புதிய உடன்படிக்கைக்கான சாத்தியம் குறித்து ரஷ்யாவுடன் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

உலகின் உயர்மட்ட சக்திகளாக விளங்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே சீனா பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...