Main Menu

மீன்பிடி விவகாரம்: பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் தடைகளை தாமதப் படுத்துவாதாக பிரான்ஸ் அறிவிப்பு

பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இங்கிலாந்துக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் தாமதப்படுத்தும் என இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு முதல் தனது துறைமுகங்களில் மீன்பிடிக்கும் பிரித்தானிய மீன்பிடி படகுகளை நிறுத்தப்போவதாக பிரான்ஸ் எச்சரித்திருந்தது.

இருப்பினும் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடர்வதால் தடை செய்யும் நடவடிக்கையை தள்ளிவைப்பதாக இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் கூறியுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் வியாழக்கிழமை பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூனை சந்தித்து பிரெக்சிட் அமைச்சர் லோர்ட் ஃப்ரோஸ்ட் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பகிரவும்...