Main Menu

மிச்சிகன் தேவாலயம் மீது வன்முறை தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு

மிச்சிகன் தேவாலயத்திற்குள் துப்பாக்கிதாரி ஒருவர் வாகனத்தை ஓட்டிச் சென்று, துப்பாக்கிச் சூடு நடத்தி, கட்டிடத்திற்கு தீ வைத்துள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவத்தினால் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டெட்ராய்டிலிருந்து வடமேற்கே 60 மைல் (100 கி.மீ) தொலைவில் உள்ள கிராண்ட் பிளாங்கில் உள்ள பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்துவின் தேவாலயத்தின் மீதான தாக்குதல், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின் போது நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிச்சிகனில் உள்ள பர்ட்டனைச் சேர்ந்த 40 வயதான தொமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், பின்னர் தேவாலய கார் நிறுத்துமிடத்தில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதிகாரிகள் இந்த சம்பவத்தை “குறிவைக்கப்பட்ட வன்முறைச் செயல்” என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் தாக்குதலின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பகிரவும்...
0Shares