Main Menu

“மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் முன்னேற்றத்தை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது”

மனித உரிமை நிலைமை தொடர்பான இலங்கையின் நிலையான, உறுதியான முன்னேற்றத்தை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் இலங்கைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரெக்ஸிற்க்கு பின்னர் இலங்கை தனது பெரிய ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றான பிரித்தனியாவுடன் தனது வர்த்தகத்தை மேம்படுத்த எதிர்பார்த்திருந்தது என்றும் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

குறிப்பாக நாட்டுக்கு மிகவும் தேவையான அந்நிய செலாவணியைக் கொண்டு வந்த சுற்றுலாத் துறை, கொரோனா காரணமாக பதிப்படைந்தது என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் தற்போது நாட்டில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி நடவடிக்கை சுற்றுலாவுக்கு மிகவும் உகந்த சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை தந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் இலங்கை நடுநிலைமையான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதோடு, அணிசேரா கொள்கையை தொடர்ந்தும் கடைபிடிக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

பகிரவும்...