Main Menu

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு- இலங்கை குறித்து அமெரிக்கா அறிக்கை

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட பாகுபாடு  தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “இலங்கை அரசாங்கம் சிறுபான்மையின மக்கள் மீதான திட்டமிடப்பட்ட பாகுபாட்டைக் காண்பிப்பதாக சிறுபான்மையின மதக்குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

சிறுபான்மையின மக்கள் மீது மத ரீதியாக முடுக்கிவிடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அரச அதிகாரிகளோ அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களோ பெருமளவில் அல்லது முழுமையாகவோ அக்கறை செலுத்தவில்லை.

சிறுபான்மையினத்தவர் மற்றும் அவர்களது மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு மேற்படி இருதரப்புக்களும் முயலவில்லை என்றும் சிவில் சமூக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன” என அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...