Main Menu

மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை அமித்ஷா தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த பதிவில், “கொரோனா தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் நான் பரிசோதனை மேற்கொண்டேன். அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்.

கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட நீங்கள் அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி பரிசோதனையை மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...