Main Menu

போராட்டம் நடத்த வேண்டும் என்றால் எனது தலையை துண்டித்து விடுங்கள் – மம்தா

ஆம்பன் புயல் காரணமாக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் என மேற்கு வங்காள மாநில முதலமைச்சர்  மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.

ஆம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில்  கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களுக்கு இன்னும் மின்சாரம் வரவில்லை. அத்தியாவசிய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் இது சம்பந்தமாக நிருபர்களிடம் கூறும்போது, “புயல் தாக்கி 2 நாட்கள் ஆகி உள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

நாங்கள் அனைவரும் இரவு- பகல் பாராமல் இதற்காக உழைத்துக்கொண்டு இருக்கிறோம். எல்லா பணிகளும் விரைவில் முடிந்து விடும். இதற்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.

அதையும் மீறி போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.