Main Menu

போதைப் பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்கள் முன்வரவேண்டும்

போதைப் பொருள் தொடர்பாக எத்தகைய தகவல்களையும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக வழங்க முடியும் என்று அபாயகர மருந்து கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் திருமதி குமுதினி ஜயதிலக்க தெரிவித்துள்ளார். 

இவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல்களை வழங்க முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார். 

போதையற்ற நாடு என்ற தொனிப் பொருளின் கீழ் போதை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பல மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் .இந்த வேலைத்திட்டத்தின் இறுதிக் கட்டம் மேல் மாகாணத்தை கேந்திரமாகக் கொண்டு அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு மேலதிகமாக அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரஜீவ மெதவத்த கருத்து தெரிவிக்கையில், சட்டவிதிகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஒரு போதைப் பொருள் கடத்தல்காரரினால் கிராமமும், நாடும் வேறு திசைக்கு மாறுமாயின், அவருக்கு எதிராக சட்டத்தை ஆகக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பகிரவும்...