Main Menu

பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே, இந்த நோயை நாம் வெல்ல முடியும் – உள்துறை அமைச்சகச் செயலாளர்

உள்ளிருப்பு வெளியேற்றத்தின் போது அறிவிக்கப்பட்ட நடைமுறைச் சட்டங்களில் முக்கியமாக அறிவிக்கப்பட்டமை, தனியார் இடங்களில், குடும்பங்களில் உறவுகளுடன் கூடும்போது, 10 பேரிற்கு மேற்படாமல், கூடவேண்டும் என்பதாகும். ஆனால் இன்று பிரான்சின் யாப்புகளை இயற்றும் தேசிய அமைப்பான, யாப்பு ஆலோசனை சபை இதைக் காவற்துறையினரால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வியை உள்துறை அமைச்சகத்தை நோக்கிக் கேட்டுள்ளது.

ஒரு தனியார் இடத்தில், அல்லது வீட்டிற்குள் எத்தனை பேர் கூடியுள்ளார்கள் என்பதை எப்படிக் காவற்துறையினரால் சோதனை செய்யமுடியும் என்ற வினாவை இந்தச் சபை கேட்டுள்ளது. இது முடியாத காரியமாகவே உள்ளது. மக்கள் பொறுப்புடன் நடப்பதைத் தவிர இதற்கான மாற்றுவழிகள் எதுவும் இல்லை.

«பிரெஞ்சு மக்களே! கொஞ்சம் குடிமக்கள் பண்புடன் நடந்து கொள்ளுங்கள். இன்னமும் வைரஸ் பரவல் தீவிரமாகவே உள்ளது. நாங்கள் இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும். நீங்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே, இந்த நோயை நாம் வெல்ல முடியும். உங்களையும் பாதுகாத்து, மற்றவர்களையும் பாதுகாத்தக் கொள்ளுங்கள்» எனப் பிரான்சின் உள்துறை அமைச்சகத்தின் அரசாங்கச் செயலாளர் லொரோன் நூனெஸ் (Laurent Nuñez) கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும்...