Main Menu

பேரூந்து விபத்து : 28 பேர் காயம்

பெலம்பிட்டியிலிருந்து யட்டியந்தோட்டை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடடைந்துள்ளனர். 

ஜயவிந்தாகம பகுதியில் கட்டுப்பாட்டையிழந்த நிலையில் பள்ளத்தில் விழுந்து இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை யட்டியந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...