Main Menu

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை விடுவிக்குமாறு வலியுறுத்தல்

அவுஸ்திரேலியாவில் ஏதிலிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலியை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஏதிலிகள் பேரவை இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இலங்கையில் இருந்து ஏதிலி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்றடைந்தார்.

2010ம் ஆண்டு அவருக்கு ஏதிலி அந்தஸ்த்து வழங்கப்பட்ட போதும், பின்னர் அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்று சான்றுப்படுத்தப்பட்டார்.

இதனால் அவரது சுதந்திர நடமாட்டத்துக்கு தடை ஏற்பட்டதுடன், கிறிஸ்ட்மஸ் மற்றும் விலாவுட் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவர் அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்று வழங்கப்பட்ட சான்றிதழ் பின்னர் நீக்கப்பட்ட போதும், அவுஸ்திரேலிய சட்டங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவரால் மீண்டும் பாதுகாப்பு வீசாவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகியது.

இந்த நிலையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரை விடுவிக்குமாறு அவுஸ்திரேலியாவில் பரவலாக வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...