Main Menu

புதிய கொரோனா கட்டுப் பாடுகளுடனான எல்லை கட்டுப் பாடுகளை அறிவித்தது பிரான்ஸ் !

நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை எதிர்த்துள்ள பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், கடுமையான புதிய கொரோனா கட்டுப்பாடுகளுடனான எல்லை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்

அந்தவகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்துவரும் அத்தியாவசிய பயணம் தவிர தவிர்ந்த அனைத்து பயணங்களும் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளே இடம்பெறும் பயண நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளும் கடுமையாக்கப்படும் என்றும் பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.

சமீபத்திய விதிமுறை கடுமையாக இருந்தபோதிலும், பிரான்ஸில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தே காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை புதிய கட்டுப்பாடுகள் பிரித்தானியாவை பாதிக்கும் என்றாலும் வணிக நடவடிக்கையில் தாக்கத்தை செலுத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...