Main Menu

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம்

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் கொலோனா (Catherine Colonna) 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

15ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர், நாளை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

15ஆம் திகதி மும்பை செல்லும் கேத்தரின் தொழில்நிறுவன தலைவர்களை சந்திப்பதுடன், தொழில் நிறுவனங்களையும் பார்வையிடவுள்ளார்.

கேத்தரினின் வருகை வர்த்தகம், பாதுகாப்பு, காலநிலை, கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பகிரவும்...