Main Menu

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச்- நடால் இறுதிப் போட்டியில் மோதல்!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், நோவக் ஜோகோவிச் மற்றும் ரபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான முதல் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், கிரேக்கத்தின் ஸ்டீபனேஸ் சிட்ஸிபாசும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட் கணக்குகளில் நோவக் ஜோகோவிச் போராடி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.


இரண்டாவது ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடாலும், அர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் ரபேல் நடால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.


‘கிளே ஒஃப் த கிங்’ என வர்ணிக்கப்படும் நடப்பு சம்பியன் ரபேல் நடால், இதுவரை பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில், 12 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த தொடரில் அதிக சம்பியன் பட்டத்தை வென்றவரும் அவரே.

முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச், இதுவரை 2016ஆம் ஆண்டு மட்டுமே பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில், சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பகிரவும்...