Main Menu

பிரான்ஸ்: நாடாளு மன்றத்தைக் கலைக்க உடன்பட வேண்டாம் – ஜனாதிபதி மக்ரோன் கோரிக்கை

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களுடன் எலிசே மாளிகையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. அதன்போது நாடாளுமன்றத்தைக் கலைக்க உடன்படவேண்டாம் என ஜனாதிபதி மக்ரோன் கோரியுள்ளார்.

புதிய பிரதமரை நியமிக்கும் பணியில் ஜனாதிபதி மக்ரோன் ஈடுபட்டுள்ளார். பல்வேறு கட்ட அரசியல் சந்திப்புக்கள் எலிசே மாளிகையில் இடம்பெற்று வருகிறது. இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது கலந்துகொண்ட அரசியல் கட்சிகளிடம் ‘2027  ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டாம். அதற்கு உடன்படவும் வேண்டாம்!’ எனவும் கோரியுள்ளார்.

புதிய ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் அரசாங்கம் இருக்கும் நிலையில், நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் அரசாங்கம் மீண்டும் கவிழ்க்கப்படுவதற்குரிய சந்தர்ப்பம் இருப்பதால், அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என மக்ரோன் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares