Main Menu

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் – Marine Le Pen போட்டியிடுவதை விமர்சித்த பிரதமர்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் Marine Le Pen இனை பிரதமர் Jean Castex மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

“Marine Le Pen ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவது நாட்டுக்கு பேரழிவாக இருக்கும்!” என தெரிவித்த பிரதமர்,

“Marine Le Pen மக்களுக்கு போலியான நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். அவரால் நடுநிலையாக செயற்பட முடியும் எனவும், அவர் சிந்தனைகளை மாற்றிக்கொண்டுவிட்டார் எனவும் நம்ப வைக்கிறார். ஆனால் அது மக்களை ஏமாற்றுவதாகும். மக்களுக்கு எதையும் தீர்மானமாக நம்ம வைக்க முடியாது!” என தெரிவித்தார்.

இம்மானுவல் மக்ரோனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரான்சின் தென்கிழக்கு நகரமான Carpentras இற்கு நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் Jean Castex பயணித்திருந்தார். அங்கு இம்மானுவல் மக்ரோனின் ஆதரவாளர்களை சந்தித்து உரையாடினர். மக்ரோனின் தேர்தல் பரப்புரை புத்தகத்தை மக்களிடம் கையளித்து அவர்களிடம் ஆதரவு திரட்டினார். அதன்போதே இதனை பிரதமர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலின் முதற்சுற்று வாக்கெடுப்புக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், மக்ரோனுக்கும் Marine Le Pen இற்கும் மிக நெருக்கமான போட்டி நிலவுகிறமை குறிப்பிடத்தக்கது.  

பகிரவும்...