Main Menu

பிரான்ஸ் ஜனாதிபதி உரை! – புதிய அறிவிப்புகள்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

“நாங்கள் இன்னும் தொற்று படலத்தில் இருந்து மீளவில்லை. உலக மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக மாறும் வரை நாங்கள் வைரசுடனும், அதன் திரிபுகளுடனுமே வாழ வேண்டிய தேவை உள்ளது.” என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

டிசம்பர் 2020 இல் இருந்து இன்று வரையான 10 மாதங்களில் நாங்கள் 100 மில்லியன் அலகு தடுப்பூசிகளை போட்டுள்ளோம். உங்களில் 51 மில்லியன் பேர் தடுப்பூசியினை நிறைவு செய்துள்ளீர்கள். pass sanitaire-இற்கு நன்றிகள். எங்களால் வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.” எனவும் தெரிவித்தார்.

டிசம்பர் 15 ஆம் திகதியில் இருந்து, 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் pass sanitaire இல் மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பது கருத்தில் கொள்ளப்படும். ‘நீங்கள் தடுப்பூசியினை நிறைவு செய்து (இரண்டு தடுப்பூசிகள்) ஆறு மாதங்கள் ஆகியிருந்தால்… நீங்கள் மூன்றாவது தடுப்பூசியினை போட்டுக்கொள்ள ஏற்புடையவர்களாக இருந்தால் மிக விரைவாக மூன்றாவது பூஸ்ட்டர் தடுப்பூசியினையினை போட்டுக்கொள்ளுங்கள்!” எனவும் மக்ரோன் தெரிவித்தார்.

pass sanitaire கட்டுப்பாடுகள் அனைத்து இடங்களிலும் இறுக்கமாக கண்காணிக்கப்படும். குறிப்பாக நெருக்கமாக இடம்பெறும் நிகழ்வுகளில் கட்டாயம் இவை அவதானிக்கப்படும்.”

பாடசாலைகளில் முகக்கவசம் தொடர்ந்தும் கட்டாயமாக இருக்கும் . 5 தொடக்கம் 11 வயது வரை நாங்கள் தடுப்பூசி போடப்போவதில்லை. இதனால் பாடசாலைகளில் முகக்கவசம் கட்டாயாமாகின்றது.

இவை அனைத்தும் தான் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனினால் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டவை.

பகிரவும்...