Main Menu

பிரான்ஸில் மீண்டும் மருத்துவ அவசரநிலை அறிவிப்பு!

பிரான்ஸில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், அங்கு மீண்டும் மருத்துவ அவசரநிலையை அந்நாட்டு அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை முதல் பரிஸ் உள்ளிட்ட 9 மாகாணங்களில் டிசம்பர் 1ஆம் திகதி வரை, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அமுல்படுத்தப்பட்டிருந்த மருத்துவ அவசரநிலை கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஜூலை விலக்கிக்கொள்ளப்பட்டது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டத்தையடுத்து பிரான்ஸில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

உலகளில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை ஏழு இலட்சத்து 79ஆயிரத்து 63பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 33ஆயிரத்து 37பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 22ஆயிரத்து 591பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 104பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...