Main Menu

பிரான்ஸில் இதுவரை 4 166 மூதாளர்கள் உயிரிழப்பு – மொத்த மரணங்கள் 12,210

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இலக்காகி இதுவரை 4 166 மூதாளர்கள் முதியோர் இல்லங்களில் உயிரிழந்திருப்பதோடு, கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவனைகளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள 424 பேருடன், மூதாளர் இல்லங்கள் உள்ளிட்ட வெளிப்புற மரணங்களுடன் மொத்தம் 1341 இறப்புக்கள் பதிவாகி உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ன.

கடந்த 24 மணிநேரத்தில் 2000ம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடு, மொத்தமாக 23 000 பேர் மருத்துமனைகளில் இருந்து திரும்பியுள்ளனர். புதிதாக 3000பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 30 767 பேர் மருத்துமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

7 066 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 105 பேர் 30 வயதுக்கு கீழ்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 369 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

இதுவரை மருத்துமனைகளில் உயிரிழந்த 8044 பேர்களில் 90 வீதமானவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மூதாளர் இல்லங்களும் உள்ளடங்கலாக மொத்தமாக 12 210 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதேவேளை இன்று நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி ஏமானுவல் மக்ரோனின் ஆற்ற இருந்த உரை, எதிர் வரும் திங்கட்கிழமை இடம்பெறுமென ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

பகிரவும்...