Main Menu

பிரான்சில் இறைச்சி மற்றும் தானிய வகைகளின் விலை அதிகரிப்பு

தற்போது நிலவும் பணவீக்கம் கரணமாக பல அன்றாட உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதில் இறைச்சி விலைகளே அதிகளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட ஓகஸ்ட் மாதத்தில் 7.9% வீதத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் மற்றும் எரிவாயு, மின்சார கட்டணம் போன்றவை அதிகளவில் உயர்வடைந்துள்ளது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் 28% வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த உயர்வானது பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

துண்டாக்கப்பட்ட இறைச்சியின் விலை 21% வீதத்தால் அதிகரித்துள்ளது. பாஸ்தா உணவுப்பொருட்கள் 19% வீதத்தால் விலை அதிகரித்துள்ளது.

மேலும், பிரான்சில் தாணிய வகைகளின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...