Main Menu

பிரான்சிற்குள் கடந்த 24 மணித்தியாலத்தில் 330 மரணங்கள்

சர்வதேசம் 250.000 சாவுகளைத் தாண்டிச் செல்கையில் ஐரோப்பா 145.000 சாவுகளை நெருங்கியுள்ளது. இத்தாலி, பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியவை ஐரோப்பாவின் சாவுகளின் 90 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில் பிரான்சின் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்

கடந்த 24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 330 பேர் சாவு
– வைத்தியசாலையில் 234 சாவுகள்
– முதியோர் இல்லத்தில் 96 சாவுகள்

தொற்று ஆரம்பத்திலிருந்து பிரான்சின் மொத்தச் சாவுகள்  25.531
(இதில் வீட்டிலிருந்து சாவடைந்தவர்களின் சேர்க்கப்படவில்லை)

வைத்தியசாலையில்  மொத்தச்சாவுகள் 16.060

வயோதிப இல்லங்களில்  மொத்தச் சாவுகள்  9.471

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள்  24.775 (-773)

உயிராபத்தான நிலையில் COVID-19 அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்  3.430

பிரான்சில் தற்போது தொற்றிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 132.967

52.736 இற்கும் மேற்பட்ட  நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து  வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். (இதில் வீட்டிலிருந்தே குணமானவர்கள் தொகை சேர்க்கப்படவில்லை)

பகிரவும்...