Main Menu

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக டக்ளஸ் அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிலே ஈ.பி.டி.பி. கட்சி வீணைச் சின்னத்திலே தனித்து போட்டி போட இருக்கின்றோம். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒர் இரு தினங்களில் வெளியிடுவோம் என கடற்தொழில் அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு முகத்துவாரத்தில் அமைந்துள் சுற்றுலா விடுதியில் நேற்று சனிக்கிழமை (14) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அமைச்சர்,

கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு காரணங்களுக்காக விஜயம் மேற்கொண்டுள்ளேன் ஒன்று என்னுடைய அமைச்சோடு சம்மந்தபட்ட வேலைத்திட்டங்களை பார்ப்பதற்கும் ஜனாதிபதியும் பிரதமரும் என்மேல் இருக்க கூடிய நம்பிக்கை காரணமாக எனக்கு இந்த அமைச்சு பதவியை தந்திருக்கின்றார்கள்.

அதன் ஊடாக நாடு தழுவிய ரீதியில் கடற்தொழிலாளர்கள் எதிர் கொள்ளுகின்ற பிரச்சனைகளை விரைவாக தீர்ப்பதற்கும் இனங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வை ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாட்டிலே நியாயமான விலையிலே போசாக்கு உணவை பெற்றுக் கொள்வதற்காகவும் அந்நிய செலவணியை அதிகரிப்பதற்காக இந்த அமைச்சு பொறுப்பை தந்திருக்கின்றார்.

அந்த ரீதியில் நாடுதழுவிய ரீதியில் அதனை பார்ப்பதற்காக பிரயாணித்து கொண்டிருக்கின்றேன். அத்தோடு எனது கட்சியின் அரசியல் கொள்கைகள் அரசியல் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கும் வந்துள்ளேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண தமிழர்கள் கூட்டமைப்பு என தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் இருந்து பல பிரமுகர்கள் வந்து என்னுடன் பேசினார்கள் அப்போது நாங்கள் வாக்குகள் சிதறக் கூடாது என உடனடியாக ஏற்றுக் கொண்டு அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றதாக தெரிவித்து அண்மை நாட்கள்வரை அதனை தெரிவித்தும் செய்தும் வந்திருக்கின்றோம்.

ஆனால் அப்படி கூட்டமைப்பு என்று வந்தவர்கள் இரண்டாக பிரிந்தனர். அதன் பின் அதற்குள் இருக்க கூடிய அரசியல் கட்சிகளும் வெவ்வேறு போக்கில் போயிருக்கின்றனர். ஐக்கியத்துக்கான பல முயற்சிகள் செய்து அது வாய்க்கவில்லை ஆனால் நாங்கள் தேசிய பட்டியலை கருத்தில் வைத்துக் கொண்டும் கட்சியின் கொள்கைகள் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் முன்வைத்து அவர்களது ஆணையை பெறுவது தான் எங்களுடைய நோக்கம். அந்தவகையில் இந்த தேர்தலில் தனித்து களமிறங்குவதாக முடிவெடுத்துள்ளோம்.

எனவே தேர்தலில் போட்டியிடுவபர்களின் பெயர் பட்டியலை வெகு விரைவில் அறிவிப்போம். என்றார்

பகிரவும்...