Main Menu

பாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை

பாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து தொழிநுட்ப குழு ஒன்றை  உருவாக்கியுள்ளது.

குறித்த குழுவினால் எடுக்கப்படும் தீர்மானத்துக்கமைய, பாடசாலையை மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 12 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆகையினால் கொரோனா வைரஸ் தொற்று குறைவடைந்த பின்னர் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களை கொண்ட 3 ஆயிரத்து 884 பாடசாலைகளை முதல் கட்டமாக ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று 12  முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு இரு வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர்  மாவட்ட, பிரதேச மட்டத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கக்கூடிய சாதகமான நிலைமைகள்  குறித்து ஆராய உள்ளதாக   அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...