Main Menu

பாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை கைப்பற்றிய ஆஸி.

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டியில் பத்து விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலவதாக ஆரம்பமாகியுள்ள இருபதுக்கு – 20 தொடரின் முதல் போட்டி மழைக் காரணமாக எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டது. 

இதன் பின்னர் கடந்த 05 ஆம் திகதி கேன்பராவில் இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது, இந் நிலையில் இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றைய தினம் பேர்த்தில் ஆரம்பானது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

பாகிஸ்தான் அணி சார்பில் இப்திகார் அஹமட் மாத்திரம் 45 ஓட்டங்களை அதிகடிபயாக பெற்றார். ஏனைய வீரர்கள் அனைவரும் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர். 

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் கேன் ரிச்சண்டர்சன் 3 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டாக், சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அஷ்டோன் அகர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் 107 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் இருவரும் இணைந்து 11.5 ஓவர்களிலேயே அசராது வெற்றியில்ககை கடந்தனர்.

டேவிட் வோர்னர் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 48 ஓட்டங்களையும், ஆரோன் பிஞ்ச் 36 பந்துகளில் 3 ஆறு ஒட்டம் 4 நான்கு ஒட்டம் அடங்கலாக 52 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரை அவுஸ்திரேலிய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

போட்டியின் ஆட்டநாயகனாக சீன் அபோட்டும், தொடரின் ஆட்டநாயகனாக ஸ்டீவ் ஸ்மித்தும் தேர்வுசெய்யப்பட்டனர்.

பகிரவும்...