Main Menu

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

“பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கான பணிகள் ஜூலை 05ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக, பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படாது. பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளைக் கொண்டே, விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த விரிவாக்கப் பணிகளை இரண்டு, மூன்று மாதங்களுக்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

பகிரவும்...