Main Menu

பரிஸ் வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

கொவிட்-19 தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான கவலைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறக்கப்படும் திகதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பரிஸ் டிஸ்னி பூங்கா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக இருந்தது.

ஆனால், தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனாவால் பிரான்ஸ் நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், பெப்ரவரி 13ஆம் திகதி பூங்கா திறப்பு தடைபட்டு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பரிஸ் டிஸ்னி பூங்கா ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்தால் இந்த முடிவிலும் மாற்றம் ஏற்படலாம் என பரிஸ் வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வால்ட் டிஸ்னி பூங்கா கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக மூடப்பட்டிருந்தது. இந்த பூங்கா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி மூடப்பட்டது.

பின்னர் வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து ஜூன் 15ஆம் திகதி திறக்கப்பட்டது. அதன் பின் வைரஸ் பரவல் அதிகரித்தையடுத்து மீண்டும் ஒக்டோபர் 30ஆம் திகதி மூடப்பட்டது.

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள், கலிபோர்னியா, புளோரிடா, பரிஸ், டோக்கியோ, ஷங்காய் மற்றும் ஹொங்கொங் ஆகிய இடங்களில் உள்ளது.

பகிரவும்...