Main Menu

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் விலகல்!

பிரான்ஸின் முன்னணி கால்பந்து கழக அணியான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து, இரு முக்கிய வீரர்கள் வெளியேறவுள்ளனர்.

கழகத்தின் தலைவரான தியாகோ சில்வா மற்றும் முன்கள வீரரான எடின்சன் கவானி ஆகியோரே, தங்களது ஒப்பந்த காலம் நிறைவடையவுள்ள நிலையில், அணியிலிருந்து வெளியேறவுள்ளனர். இந்த இரு வீரர்களினதும் ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி காலாவதியாகவுள்ளது.

இதில் உருகுவே முன்கள வீரரான 33 வயதான எடின்சன் கவானி, அத்லெடிகோ மட்ரிட் அணிக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 காரணமாக பிரான்ஸின் லீக் 1 தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இரத்துச் செய்யப்பட்டது. எனினும், ஒரு குறுகிய போட்டித் தொடராக மூடிய அரங்கில் சம்பியன் லீக் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வரும் ஜூன் 22 ஆம் திகதி பயிற்சிகளை ஆரம்பிக்கவிருப்பதோடு அந்த அணி கடந்த மார்ச் மாதம் பொருசியா டோர்ட்மண்ட் அணியை தோற்கடித்து ஏற்கனவே ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...