Main Menu

பதில் அமைச்­சர்கள் நிய­மனம் எதி­ராக நீதி­மன்றம் செல்ல தீர்­மானம்

பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­க­ளது இடங்­க­ளுக்கு பதில் அமைச்­சர்­களை ஜனா­தி­பதி நிய­மித்­தமை சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பாடு எனத் தெரி­வித்து உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சிவில்  அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் சிலர் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அமைச்சர் ஒருவர் வெளிநாடு சென்­றி­ருந்தால் அல்­லது சுக­வீ­ன­முற்­றி­ருந்தால் மட்­டுமே பதில் அமைச்சர் நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் பத­வியை அமைச்சர் ஒருவர் ராஜி­னாமா செய்­தி­ருந்தால் அந்த இடத்­திற்கு பதில் அமைச்சர் ஒரு­வரை நிய­மிக்க முடி­யாது என்றும் சட்­டத்­துறை வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. இத­ன­டிப்­ப­டை­யி­லேயே வழக்­குத்­தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­கின்­றது.

இதே­வேளை பதவி துறந்­துள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் மூவ­ரது இடத்­திற்கு அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, மலிக் சம­ர­விக்­கி­ரம ரஞ்சித் மத்­தும பண்­டார ஆகி­யோரை நிய­மிக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யிடம் கடிதம் மூலம் கோரி­ய­போ­திலும் அதனை ஜனா­தி­பதி ஏற்றுக்கொள்ள வில்லை என்றும் இதனையடுத்தே பதில் அமைச்சர்கள் நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...