Main Menu

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டு சம்பவ நேரலையை பகிர்ந்த நபருக்கு சிறை

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் வெலிங்டன் நீதி மன்றத்தில் இது குறித்த விசாரணை இடம்பெற்றபோது இது மிகப்பெரிய குற்றம் என்பதனால் குற்றம் சாட்டப்பட்ட பிலிப் என்பவருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கிறேன் என நீதவான் உத்தரவிட்ருந்தார்.

கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 51 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அந்த நபர் சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார்.

இறுதியில், இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான பிரென்டன் டாரன்ட் என்னும் 28 வயதான அவுஸ்ரேலியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப பட்டபோது அதனை பல இணையதள பயனாளர்கள் பகிர்ந்தனர். அதனை பேஸ்புக், யூடியூப் போன்ற நிறுவனங்கள் தங்களது வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கின.

இவ்வாறு நியூசிலாந்து துப்பாக்கி சூடு தாக்குதலை சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்ததாக கிறிஸ்ட்சர்ச் பகுதியை சேர்ந்த பிலிப் ஆர்ப்ஸ் என்ற தொழில் அதிபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...