Main Menu

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜேம்ஸ் வின்ஸ்இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் ஐந்து ஆட்டம் கொண்ட டி20 போட்டி தொடரில் முதல் ஆட்டம் இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் 2 ரன்னிலும், முன்ரோ 21 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

அதன்பின் டிம் சிபர்ட் (32 ரன்), ராஸ் டெய்லர் (44 ரன்) ஜோடி சிறப்பாக விளையாடியது. கடைசி கட்டத்தில் டேரில் மிட்செல் 17 பந்தில் 30 ரன் எடுத்தார்.

நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் டேவிட் மலன் 11 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி

அதன்பின் ஜேம்ஸ் வின்சி (59 ரன்), கேப்டன் மோர்கன் (34 ரன்) ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இங்கிலாந்து 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி வெலிங்டனில் நடக்கிறது.

பகிரவும்...