Main Menu

நாளை மறுதினம் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – பழனிசாமியுடன் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்து அ.தி.மு.க.வின் சில மூத்த அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க.வில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில்  நாளை மறுதினம் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார்.

இதனிடையே அ.தி.மு.க. கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை தனது ருவிட்டர் பக்கத்தில், தமிழக மக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் நலனை கருத்திற்கொண்டு தனது முடிவு இருக்கும் என தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை றடத்தியுள்ளனர்.

பகிரவும்...