Main Menu

நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – அரசாங்கம்

நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அரசாங்கம்  வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்  இலங்கை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுருக்கமாக பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, வெளிவிவகார அமைச்சின் ஊடாக அரசாங்கம் மிச்செல் பச்லெட்க்கு முழுமையான பதிலை வழங்கும் என்று கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை, சிவில் நிர்வாகக்கட்டமைப்புக்கள் இராணுவ மயமாக்கப்படல், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் நம்பகமான முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இந் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல். பீரிஸ், இன்றையதினம் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...