Main Menu

நாட்டின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் குறித்து அரசாங்கம் கவனிப்பதில்லை – ஜே.வி.பி.

இந்த அரசாங்கம் நாட்டின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தாமலேயே வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

பெரும்பாலான நாடுகள் உதவி வழங்கும் போது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்ற நிலையில் அரசாங்கத்திடம் கடுமையான திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் நிதி பெறுவதற்காக அல்ல ஆனால் கடுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் இந்தியா நிதி வழங்குகிறது என கூறினார்.

குறிப்பாக இந்தியா அரசியல் நிபந்தனைகளைக் கூட விதித்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பகிரவும்...