Main Menu

நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு தொடர்பில் அறிவிப்பு

புதிய நாடளுமன்றத்தின் முதல் நாள், நவம்பர் 21 ஆம் திகதி என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி 10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய பட்டியலிலிருந்து 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என,நாடாளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் முதல் நாளில் பல சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புப் பிரிவு அறிவித்துள்ளது.

பகிரவும்...
0Shares