Main Menu

நவிகோ நஷ்ட்ட ஈடு வழங்குவதாக போலி இணையத்தளம்

அண்மைக்காலங்களில் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்குவதாக பல போலி இணையத்தளங்கள் இயங்குவதாக செய்திகள் வெளி வந்துள்ளன .  இது தொடர்பாக பொதுமக்களை விழிப்புடன் இருக்கும் படி அரசு கோரியுள்ளது.

நவிகோ பயனாளர்கள், வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு பெற்றுதருவதாக குறித்த சில இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்கள் பெயர், முகவரி என்பவற்றோடு வங்கி கணக்குகளும் கோரப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் போலியானவை எனவும், இவற்றில் எவ்வித தகவல்களையும் பகிரவேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது. 

 ‘100 வீதம் நேர மிச்சம்’ என அவர்கள் விளம்பரப்படுத்துகின்றனர். ஆனால் அவற்றில் தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும், உத்தியோகபூர்வ இணையத்தளம் ஜனவரி இறுதியில் தான் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...