Main Menu

ஆஸ்திரேலியாவில் 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக் கொலை!

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், தற்போது வறண்ட சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டின் வனப்பகுதிகளில், தண்ணீர் இல்லாமல் போனதால், அடிக்கடி காட்டுத்தீ உருவாகி வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல்வகை ஒட்டகங்கள், கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை அதிகம் குடிப்பதாகக் கூறி சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்து நாட்களில் ஒட்டகங்களை கொல்வதற்கு சிறப்புக் குழுவையும் ஆஸ்திரேலியா அரசு நியமித்துள்ளது. இந்நிலையில், 5 நாட்களில் சுமார் 5,000 ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் பறந்த படி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...