Main Menu

தொழிலாளர்களை பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக மாற்ற வேண்டும்- வடிவேல் சுரேஸ்

இளைஞர்களையும் தொழிலாளர்களையும் பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இன்று இலங்கைக்கு தேயிலை உற்பத்தியில் 75 சதவீதமான வருமானம் சிறுதேயிலை உற்பத்தியாளர்களிடம் இருந்தே கிடைக்கின்றது. பெருந்தோட்டங்களில் இருந்து 25 சதவீதமான வருமானமே கிடைக்கின்றது.

தற்போது இலங்கையில் சிறுதேயிலை தோட்டங்கள் அபிவிருத்தி அடைவதற்கு காரணம் முயற்சியாளர்களின் முயற்சியும் அரசாங்கத்தின் பல்வேறு உதவி திட்டங்களுமாகும்.

இந்நிலை பெருந்தோட்டங்களிலும் நிலவ வேண்டுமானால் பெருந்தோட்ட காணிகளை மலையக இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரித்து கொடுத்து அவர்களையும் முதலாளிகளாக ஆக்குவதே சிறந்தது” என மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...