Main Menu

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு சூழ்ச்சிகரமாக இருக்கின்றது – அனுர

சுயாதீன ஆணைக்குழு என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை குறிப்பிட்டாலும் அதன் செயற்பாடு சூழ்ச்சிகரமாக இருக்கின்றது என ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் இருப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்திலேயே ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் அந்த ஆணைக்குழு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவதாக அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிரவும்...