Main Menu

தென்கொரியா குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து- 500 பேர் வெளியேற்றம்

தென்கொரியா நாட்டில் அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க பலர் மரத்தினாலான வீடுகளில் வசித்து வருகின்றனர். உடலுக்கும் இது ஆரோக்கியம் என்பதால் பெரும்பாலானோர் இந்த வீடுகளை கட்டுகின்றனர். அந்த நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள சாண்டி நகரில் குடிசை பகுதி உள்ளது. இங்கு 660 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை இந்த குடிசை பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இது பற்றி அறிந்ததும் 290-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த மீட்பு பணியில் 10 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. அவர்கள் தீ விபத்தில் சிக்கி தவித்த 500 பேரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல வீடுகள் சேதம் அடைந்தன. வீட்டுக்குள் இருந்த பொருட்களும் தீயில் கருகியது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

பகிரவும்...