Main Menu

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பா.ஜ.க.இல் இணையவுள்ளதாக தகவல் – ஸ்டாலின் அவசர ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஆயிரம் விளக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பா.ஜ.க. தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

ஏற்கனவே தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...