Main Menu

தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி

இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பக பாங்காக் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார்.

திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடிபாங்காக்:
இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று தாய்லாந்து சென்றார்.
இன்று பிற்பகல் பாங்காக் விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேரியட் மார்கிஸ் ஹோட்டலுக்கு சென்ற அவரை தாய்லாந்தில் வாழும் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

 சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி

இந்நிலையில், பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.அப்போது அவர்,  ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிட்டார்.
மேலும், குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை வெளியிட்டு பேசினார். 

பகிரவும்...