Main Menu

தவளைகள் கடப்பதற்காக வீதி மூடப்பட்டுள்ளது

வீதியை கடக்கும் தவளைகள் வாகனத்துக்குள் சிக்குண்டு இறப்பதைத் தடுக்க, வீதிப் போக்குவரத்தை முடக்கிய சம்பவம் ஒன்று பிரான்சில் இடம்பெற்றுள்ளது.

பிரான்சின் லம்பலே Lamballe (Côtes d’Armor) நகரில் இந்த நூதன சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28ஆம் இலக்கமுடைய இந்த வீதியின் இரண்டு பக்கங்களிலும் காட்டுப்பகுதி இருப்பதால் அங்கிருந்து தவளைகள் வீதிகளைக் கடக்கின்றன.

இதன்போது தவளைகள் விபத்துக்குள்ளாகுவதோடு உயிரிழப்புக்களையும் சந்திப்பதாக தன்னார்வ விலங்குகள் பாதுகாப்பு நிறுவனங்கள் குரல் எழுப்பியிருந்தன. பின்னர் குறித்த பகுதியில் தவளைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்த வீதி தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் வரை இந்த வீதி மூடப்பட்டு மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...